திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவர் இளம் வயதிலேயே பல்வேறு உயர் ரத்த அழுத்த மருந்துகளை உட்கொண்டும் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வராமல் அவதிப்பட்டு சிறுநீரகத்திற்குச் செல்லும் ரத்தக் குழாயில் ஏற்பட்டிருந்த அரிய வகை அடைப்பைக் கண்டறிந்து நவீன ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மூலம் ஸ்டென்ட் பொருத்தி தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளனர். இதன் மூலம் மாணவரின் சிறுநீரகத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டம் சீராக்கப்பட்டதுடன், கட்டுப்படுத்த முடியாத உயர் ரத்த அழுத்தத்திற்கான அடிப்படைக் காரணத்திற்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த சிகிச்சையை இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் நிஷாந்த், டாக்டர் அன்பரசன், டாக்டர் இளங்குமரன் உள்ளிட்ட குழுவினர் வெற்றிகரமாக செய்தனர் இதுகுறித்து மருத்துவமனை மூத்த ஆலோசகர் டாக்டர் மோகன் தெரிவித்தார், இன்றைய காலகட்டத்தில் உயர் ரத்த அழுத்தம் என்பது வயதானவர்களுக்கு மட்டுமின்றி இளம் வயதினரிடையேயும் அதிகரித்து வரும் முக்கியமான உடல்நலப் பிரச்சினையாக உள்ளது. மன அழுத்தம், உணவுப் பழக்க வழக்க மாற்றம், உடல் உழைப்பின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இளம் வயதினருக்கும் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுகிறது.






































Users Today : 3
Users Yesterday : 6
Total Users : 37393
Views Today : 7
Views Yesterday : 6
Total views : 69338
Who's Online : 0




