தஞ்சாவூரில் தமிழக முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள், ரத்த தானம் வழங்கி தொண்டர்கள் உற்சாக  கொண்டாட்டம்

14

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் 52 வது பிறந்த நாளை       (ஜீன் 22) தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர், இதையடுத்து தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் தமிழக வெற்றிக் கழக வடக்கு மாவட்ட மாநகர செயலாளர் சாய் ஆனந்த் தலைமையில் 52 நபர்கள் ரத்த தானம் செய்தனர், இதில் டாக்டர் ஜெகவீரபாண்டியன், தொழிலதிபர் சுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர், அதைப்போல் தஞ்சை பூக்காரத்தெரு பகுதியில் தவெக மத்திய மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் அரவிந்த் தலைமையில் கண் , காது, பொது மருத்துவம், பல் சிகிச்சை ஆகிய பல்நோக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது, இதில் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் விஜய்சரவணன் கலந்து கொண்டு சிறப்பித்தார், அதேபோல் தஞ்சை மானம்புசாவடி அன்பு இல்லத்தில் ஆதரவற்ற மாணவர்களுக்கு தஞ்சை மாநகரச் செயலாளர் வசந்த் தலைமையில் மதிய உணவு வழங்கப்பட்டது, மேலும் நாஞ்சிக்கோட்டை பகுதியில் கிளை கழகப் பொறுப்பாளர் அசோக் அரவிந்த் தலைமையில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு  புடவை, இனிப்பு  மரக்கன்றுகள் மற்றும் புலவு சாதம் ஆகியவை வழங்கி உற்சாகமாக கொண்டாடினர், இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்

தஞ்சாவூர் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா