மூக்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தோன்றும் இந்த அரியவகை கட்டிகள், மண்டையோட்டின் அடிப்புறம் வழியாக மூளையை நோக்கி வளரக்கூடிய ஆபத்து கொண்டவை. இந்தச் சிறப்பு கூட்டு அறுவை சிகிச்சையின் மூலம் நரம்பியல் நிபுணர்கள் மண்டையோட்டின் வழியாக மைக்ரோஸ்கோப் உதவியுடனும், காது மூக்கு தொண்டை நிபுணர்கள் மூக்கு வழியாக எண்டோஸ்கோப் கருவி மூலமாகவும் கட்டியை முழுமையாக அகற்றினர்,கட்டி அகற்றப்பட்ட பிறகு மூளையையும் மூக்குப்பகுதியையும் பிரிக்கும் மண்டையோட்டின் முன் பகுதியை நரம்பியல் நிபுணர்கள் நேர்த்தியாகச் சீரமைத்தனர். மூளையைப் பாதுகாக்கவும், மூளைத்தண்டுவட நீர் கசிவைத் தடுக்கவும் இந்தச் சீரமைப்பு மிகவும் அவசியமாகும். இல்லையெனில், மூளைக்காய்ச்சல் போன்ற கடுமையான தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த சவாலான அறுவை சிகிச்சைகளை நரம்பியல் துறையின் மூத்த நிபுணர் டாக்டர் அருண்குமார், நரம்பியல் துறையின் இணை நிபுணர் டாக்டர் ஸ்ரீ பிரியதர்ஷன் மற்றும் காது, மூக்கு, தொண்டை பிரிவின் மூத்த நிபுணர் டாக்டர் ஐசக் ரிச்சர்ட்ஸ், மயக்கவியல் துறையின் மூத்த நிபுணர் டாக்டர் அரிமாணிக்கம் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் வெற்றிகரமாக மேற்கொண்டனர்.








































Users Today : 3
Users Yesterday : 15
Total Users : 37104
Views Today : 3
Views Yesterday : 16
Total views : 68928
Who's Online : 0




