கோவையைச் சேர்ந்த டாக்டர் ஜெ. கோமளலட்சுமி, KLMN-SWASTIK Education Model-ஐ அடிப்படையாகக் கொண்டு Education Logo மற்றும் Education Flag-ஐ உருவாக்கியுள்ளார். மாணவர்களின் அறிவு, கற்றல் திறன், சிந்தனைத் திறன், குணநலன், தன்னிறைவு மற்றும் சமூகத்திற்கான பயனுள்ள பங்களிப்பு ஆகியவற்றை வளர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்காக கருத்தரங்குகள், Orientation நிகழ்ச்சிகள் மற்றும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது இந்நிகழ்ச்சியில் Building Human Potential for Viksit Bharat @2047 – Education, Skills, Character and Contribution” என்ற தலைப்பின் கீழ், கல்வி, திறன், குணநலன் மற்றும் நாட்டிற்கான பங்களிப்பு ஆகியவற்றை மையமாக கொண்டு நடத்துகின்றன,கல்வி என்பது தேர்வுகள் மற்றும் மதிப்பெண்களுக்கு மட்டுமே உரியதாக இல்லாமல், அறிவு, திறமை, சிந்தனை, மதிப்புகள், குணநலன், புதுமை மற்றும் பொறுப்புணர்வு கொண்ட எதிர்காலக் குடிமக்களை உருவாக்க வேண்டும் என்பதே இந்த முயற்சியின் அடிப்படை நோக்கமாகும். Education Logo-வை உள்ளடக்கிய Education Flag, மாணவர்களுக்கு தொடர்ந்து சிந்திக்கவும், கற்றதைப் புரிந்து கொள்ளவும், தொடர்புபடுத்தவும், சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனுள்ள பங்களிப்பாக மாற்றவும் ஒரு கற்றல் தூண்டுதலாக உருவாக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனங்களும் இணைந்து மனித ஆற்றலை வளர்ப்பதில் பங்களிக்க வேண்டும் என்பதையும் இந்த முயற்சி வலியுறுத்துகிறது. தொடர்புக்கு 9443044242 என்ற நம்பரை அழைக்கவும்









































Users Today : 26
Users Yesterday : 11
Total Users : 36749
Views Today : 41
Views Yesterday : 14
Total views : 68427
Who's Online : 1




