ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு   கட்டா குஸ்தி 2 திரைப்படம் பார்க்க டிக்கெட் வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜோதி தொண்டு நிறுவனம்

4

தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது, இதையடுத்து தஞ்சாவூரில் 100 சதவீதம் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், சீட் பெல்ட் அணிய வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் போக்குவரத்து காவல் துறை மற்றும் ஜோதி தனியார் தொண்டு நிறுவனம் மூலம் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது, அதன் ஒரு பகுதியாக தஞ்சையில் ஜோதி தனியார் தொண்டு நிறுவனம் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டி வந்து பெட்ரோல் நிரப்ப வந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர், விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக திரையில் ஓடிக் கொண்டு இருக்கும் கட்டா குஸ்தி 2 திரைப்படம் குடும்பத்தில் உள்ளவர்கள் 4 பேர்  பார்ப்பதற்கு சுமார் 50 நபர்களுக்கு இலவசமாக டிக்கெட் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். இதனை சற்றும் எதிர்பாராத அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர், இது குறித்து ஜோதி தொண்டு நிறுவன செயலாளர் பிரபு ராஜ்குமார் கூறுகையில், தஞ்சாவூரில் 100 சதவீதம் ஹெல்மெட் அணிய வேண்டும், சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி போக்குவரத்து காவல் துறை மற்றும் தொண்டு நிறுவனம் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது, அதன்படி தற்போது ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு நகைச்சுவையுடன் கூடிய கட்டா குஸ்தி திரைப்படம் பார்க்க அவர்களது குடும்பத்தினருக்கு இலவசமாக டிக்கெட் வழங்கியுள்ளோம், இதேபோல் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஐஸ்கிரீம், தக்காளி, வெங்காயம், மாம்பழம் , பட்டுப்புடவை, பெட்ரோல், வெள்ளி நாணயம், தங்க நாணயம் உள்ளிட்டவை வழங்கி உள்ளோம் என்று பெருமையுடன் கூறினார், இந்நிகழ்ச்சியில் தொண்டு நிறுவன மேலாளர் ஞானசுந்தரி, ஆர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்