தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேஷன் சார்பில் புதிய பாதை என்ற தன்னம்பிக்கையூட்டும் வாழ்க்கை வழிகாட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் தொழில் அதிபர் முகமது எஹியா, வீரக்குறிச்சி மேக்ஸ் அருள் பவுண்டேஷன் நிறுவனர் அருள் சூசை உள்ளிட்டோர் கலந்து கொண்டு மதர் தெரசா கல்வித் திட்டத்தின் கீழ் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் நலிவுற்ற குடும்பத்தை சேர்ந்த 31 மாணவ மாணவியர்களுக்கு ரூபாய் 3 லட்சத்திற்கான கல்வி உதவித் தொகையும், சுயதொழில் செய்வதற்கு 11 கைம்பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்களும் வழங்கினர், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திராவிட இயக்க தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் எழுத்தாளர் உமா கலந்து கொண்டு புதிய பாதை என்ற தலைப்பில் கைம்பெண்கள் சமுதாயத்தில் எதிர்கொள்ளும் சவால்களை தன்னம்பிக்கையுடன் போராடுவதன் மூலம் வாழ முடியும் என்று விளக்கினார், இந்நிகழ்ச்சியில் மதர் தெரசா பவுண்டேசன் சேர்மன் சவரிமுத்து, அறங்காவலர்கள் சம்பத்ராகவன் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதர் தெரசா பவுண்டேஷன் நிர்வாக மேலாளர் மெர்சி, திட்ட இயக்குனர் ரத்தீஷ்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்







































Users Today : 0
Users Yesterday : 1
Total Users : 34315
Views Today :
Views Yesterday : 2
Total views : 65267
Who's Online : 0




