Home சமூகம் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் மாபெரும் இப்தார் கொண்டாட்டம், சமூக நல்லிணக்கம், ஒற்றுமையை ஊக்குவிக்கும் வகையில் 2...

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் மாபெரும் இப்தார் கொண்டாட்டம், சமூக நல்லிணக்கம், ஒற்றுமையை ஊக்குவிக்கும் வகையில் 2 ஆயிரம் பேர் பங்கேற்பு

109

சமூக நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் ஊக்குவித்து கொண்டாடும் விதத்தில் இப்தார் விருந்து தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சார்பில் நடைபெற்றது, இதில் இந்து, முஸ்லிம் கிறிஸ்தவர்கள் என 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் நோன்பின்போ ஓது பல்வேறு சமயங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் ஊக்குவிப்பதே இந்நிகழ்வின் நோக்கமாகும். ரமலான் நோன்பு காலத்தின்போது ஆரோக்கியமாக உணவு உண்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில்,ஊட்டச்சத்துள்ள உணவுகள் பற்றிய ஆலோசனைக் குறிப்புகள் வழங்கப்பட்டது, இதில் உடல்நல பராமரிப்பு சேவைகளைப் பெற  உடல்நல பராமரிப்பு அட்டைகள் வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில்  தொழிலதிபர் முகமது ரபி, மருத்துவமனை பிஆர்ஓ மணிவாசகம், மேலாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,

error: Content is protected !!