தமிழகத்தில் தஞ்சாவூர் மாநகராட்சி மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது, இதற்கான விண்ணப்பத்தினை முனிசிபல் அலுவலகத்தில் கேட்டு பெற்றுக் கொள்ளவும் என்ற தகவல் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது, இதனையடுத்து அந்த செய்தியின் உண்மை தன்மையை அறியாமல் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முனிசிபல் அலுவலகத்திற்கு வந்து விண்ணப்பம் கேட்கின்றனர், இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர், முனிசிபல் அலுவலகத்தில் ஊக்கத் தொகைக்கு என எந்த விண்ணப்பமும் வழங்குவதில்லை, இது தவறான தகவல் ஆகும், இது குறித்து தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் ராமநாதன் கூறும்போது, தஞ்சாவூர் மாநகராட்சியில் ஊக்கத்தொகை வழங்குவதற்கு என எந்த விண்ணப்பமும் வழங்கப்படுவதில்லை, சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்,(உங்கள் நண்பர்களுக்கு இந்த நல்ல செய்தியை பகிரவும், மற்றவர்கள் ஏமாறாமல் இருக்கலாம்)









































Users Today : 0
Users Yesterday : 2
Total Users : 34562
Views Today :
Views Yesterday : 2
Total views : 65732
Who's Online : 0




