தஞ்சாவூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள்,உருவச் சிலைக்கு மாலை அணிவித்து திமுகவினர் மரியாதை

68

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மறைந்த கருணாநிதியின் 7ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தஞ்சாவூரில் மத்திய மாவட்ட திமுக கட்சி சார்பில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கருணாநிதி உருவச்சிலைக்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான துரை,சந்திரசேகரன் தலைமையில், எம்எல்ஏ டி.கே.ஜி.நீலமேகம், மேயர் இராமநாதன், துணை மேயர்
அஞ்சுகம்பூபதி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், பின்னர் அங்குள்ள கருணாநிதி உருவ புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர், முன்னதாக தஞ்சை கீழவாசல் பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் அமைதிப் பேரணியாக தஞ்சை பழைய பேருந்து நிலையம் வந்தடைந்து, அங்கு கருணாநிதி உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், இதில் கட்சி நிர்வாகிகள் இறைவன்,மேத்தா, கனகவள்ளி பாலாஜி, நீலகண்டன், செல்வி சிவஞானம், உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்