விவசாயிகளுக்கு சிறுநீரக பாதிப்பு, சிறுநீரக நோயை எதிர்கொள்ள விழிப்புணர்வு, பரிசோதனை திட்டம் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் தொடக்கம்

14

உலக சிறுநீரக தினம் ஆண்டுதோறும் மார்ச் 12 ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது, இந்நிலையில் தீவிர விவசாயம் செய்யப்படும் பகுதிகளில் விவசாயிகளிடையே நாள்பட்ட சிறுநீரக நோய் பாதிப்பு அதிகரித்து வருவது அறியப்படுகிறது. அதிக வெப்ப அழுத்தம், விவசாயத்திற்கான ரசாயனப் பொருட்களுக்கு வெளிப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் நச்சுக்களே இதற்கு முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.  காவேரி டெல்டா மாவட்டங்களில் காரணமறியப்படாத நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான காரணிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியவும், விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்நோய் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் தஞ்சாவூரில் மீனாட்சி மருத்துவமனை, இச்சிறப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. சர்க்கரை நோய் அல்லது உயர் இரத்த அழுத்தம் போன்ற வழக்கமான காரணங்கள் ஏதுமின்றி ஏற்படும் இந்தச் சிறுநீரக நோய், விவசாயத் தொழிலாளர்களிடையே அதிகளவில் காணப்படுகிறது,இத்திட்டத்தின் மூலம் ஒரு ஆண்டுக்குள் காவேரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சிறுநீரக நோய்க்கான பரிசோதனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. காவேரி டெல்டா பகுதியில் சுமார் 600 விவசாயிகளிடம் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், சுமார் 2% பேருக்கு இந்தப் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பில் சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் கெளரி சங்கர், டாக்டர்கள் சிவக்குமார்,பிரவீன், கேதார கெளரி ஆகியோர் உடன் இருந்தனர்