தஞ்சாவூரில் வரலாற்று நினைவு சின்னங்களின் பெயர் மற்றும் அதனை கட்டியவர்களின் பெயர்களை ஒரு நிமிடத்தில் கூறி
சாதனை படைத்துள்ளார்  நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி  தஞ்சை அருளானந்த நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் – நதியா இவர்களது மகள் தயாநிதிதா(10) தஞ்சையில் உள்ள  தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இவர் ஒரு நிமிடத்தில் வரலாற்று நினைவுச்சின்னங்கள் மற்றும் அதனை கட்டியவர்களின் பெயர்களை கூறி இன்டியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் தஞ்சையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்
உலகில் உள்ள தொன்மையான கட்டிடங்களின் பெயர்களை கூறியும் திரையில் தொன்மையான கட்டிடத்தின் படங்களை காட்டி அதன் பெயர்களை குறிப்பிட்டு ஒரு நிமிடத்தில் 48 நினைவுச் சின்னங்களின் பெயர்கள் மற்றும் அதனை கட்டியவர்களின் பெயர்களை எடுத்து சொல்லி இன்டியா புக் ஆப் ரெக்கார்டில் சாதனை படைத்து முதலிடம் பிடித்துள்ளார் சாதனை படைத்த மாணவிக்கு இன்டியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்  புத்தகத்தின் நடுவர் விவேக் அதற்கான பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கினார்
                






































 Users Today : 4
 Users Yesterday : 0
 Total Users : 34328
 Views Today : 10
 Views Yesterday : 
 Total views : 65296
 Who's Online : 0




