முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் திமுகவினர் உற்சாகமாக கொண்டாடினர், அதைப்போல் தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சரும் தஞ்சை தொகுதி எம்பியுமான எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அலங்கரிக்கப்பட்ட உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார், பின்னர் கட்சியினருக்கு இனிப்புகளை வழங்கி கொரனோ தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் கபசுரக்குடிநீர் வழங்கும் பணியினை தொடங்கி வைத்தார். அதைப்போல் வழக்கறிஞர் எஸ்.எஸ்.ராஜ்குமார் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கி ஆதரவற்றோர்களுக்கு மதிய உணவினையும் வழங்கினார், இந்நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் குமார்,பின்னையூர் கோவிந்தராஜ், குலோத்துங்கன், லெனின், மார்கெட் ராஜ், அழகிரி, ஆறுமுகம், பழனிவேல், மனோகரன்,விஜயகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் முககவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.









































Users Today : 1
Users Yesterday : 17
Total Users : 35184
Views Today : 1
Views Yesterday : 17
Total views : 66625
Who's Online : 0




