அதிமுக நிறுவன தலைவரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 37வது ஆண்டு நினைவு தினம் அதிமுக கட்சி மற்றும் எம்ஜிஆர் ரசிகர்களால் அனுசரிக்கப்படுகிறது, இதையடுத்து தஞ்சாவூரில் ரயிலடி பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு பின்னர் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது, இதில் அதிமுக மாவட்ட செயலாளர் சேகர், முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், மாநகர செயலாளர் சரவணன், கவுன்சிலர்கள் கோபால், கேசவன், தெட்சிணாமூர்த்தி, வார்டு செயலாளர் சம்பத் உள்ளிட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர், அதேபோல் ஓபிஎஸ் அணி ஆதரவாளர்கள் தவமணி, மணிகண்டன், சண்முகபிரபு, சுவாமிநாதன், அமுதா ரவிச்சந்திரன், ரமேஷ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.










































Users Today : 2
Users Yesterday : 7
Total Users : 34562
Views Today : 2
Views Yesterday : 13
Total views : 65732
Who's Online : 0




