தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்(நெல் கொள்முதல் பருவத்தில் மட்டும்) பணியாற்றிட பட்டியல் எழுத்தர்,உதவுபவர்,காவலர் பணியிடங்களுக்கு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்,பட்டியல் எழுத்தர் எண்ணிக்கை 62,உதவுபவர் 72,மற்றும் காவலர் 51 மட்டும் பணியாற்றிட ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்,இடஒதுக்கீடு முறையில் பொதுப்பிரிவினர் 18வயது முதல் 30 வயது வரையிலும்,பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 18வயது முதல் 32 வயது வரையிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 18முதல் 35 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்,கல்வித்தகுதி பட்டியல் எழுத்தருக்கு பிஎஸ்ஸி(பயாலஜி) உதவுபவருக்கு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் காவலர் பணியிடத்திற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், சம்பளம்: பட்டியல் எழுத்தர்:Basic Rs.2410-DA-4049 உதவுபவர்:Basic Rs.2359-DA-4049 காவலர் Basic Rs.2359-DA-4049 தகுதியுடையவர்கள் உரிய சான்றிதழ்களுடன் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம்,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சச்சிதானந்த மூப்பனார் ரோடு,(டெம்பிள் டவர் ஹோட்டல் அருகில்)தஞ்சாவூர் என்ற முகவரியில் சான்றொப்பமிட்ட கல்வித்தகுதி சான்றிதழ்,சாதி சான்றிதழ் ஆகியவற்றுடன் 28.1.2021க்குள் நேரிலோ பதிவுத்தபால் மூலமாகவோ விண்ணப்பிக்குமாறு முதுநிலை மண்டல மேலாளர் (பொ) சிற்றரசு தெரிவித்துள்ளார்.






































Users Today : 0
Users Yesterday : 1
Total Users : 34324
Views Today :
Views Yesterday : 1
Total views : 65286
Who's Online : 0




