தஞ்சாவூரில் அற்புத குழந்தை இயேசு தேவாலயம் அமைந்துள்ளது,இந்த தேவாலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது, அதனைத்
தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன,
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி வியாழன் ( பிப் 1) இரவு நடைப்பெற்றது,மல்லிகைப் பூ அலங்கார தோரணங்கள், வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களில் குழந்தை இயேசு சொரூபம் தனித்தனியாக வைக்கப்பட்டு இருந்தன.
தேர்களை குழந்தை இயேசு திருத்தலத்தின் அருட்தந்தை சுரேஷ் குமார் புனிதம் செய்து தேர் பவனியை துவக்கி வைத்தார், வான வேடிக்கை முழங்க முதல் சப்பரத்தை பெண்கள் சுமந்து சென்றனர், அதனை தொடர்ந்து இரண்டு தேர்கள் அடுத்தடுத்து அணிவகுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வழிநெடுக மக்கள் கூடி நின்று குழந்தை இயேசுவை வழிபட்டனர்.
தேர் பவனியை முன்னிட்டு தேவாலயம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன, இதில் தலைமை தந்தை ஜெயராஜ், மதர் தெரசா பவுண்டேஷன் சேர்மன் சவரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்








































Users Today : 1
Users Yesterday : 1
Total Users : 34316
Views Today : 1
Views Yesterday : 2
Total views : 65268
Who's Online : 0




