தஞ்சாவூரில் மிகவும் அரிதான கண் கட்டிகளை அகற்றுவதில் மீனாட்சி மருத்துவமனை புதிய சாதனை

8

தஞ்சை மீனாட்சி மருத்துவமனை பார்வை நரம்புகள் மீதான அழுத்தத்தால் பார்வைத்திறன் இழக்க நேரிடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருந்த இரு விவசாயிகளுக்கு மிகவும் அரிதான கண் கட்டிகளை வெற்றிகரமாக அகற்றியதன் மூலம் பார்வைத்திறனை காப்பாற்றியிருக்கிறது.  இந்த கட்டிகளை அகற்றியதோடு சேர்த்து, அழகியல் ரீதியாக பாதிப்பு இல்லாததை உறுதிசெய்ய கண்குழி சுவர்களையும் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை குழுவினர் சீரமைத்திருக்கின்றனர். 30 வயதான ஒரு விவசாயிக்கு செய்யப்பட்ட ஸ்கேன் சோதனையில் கண் குழிக்கு உள்ளே 3x2x3 அளவுள்ள ஒரு கட்டி மூளைக்குள் நீண்டிருப்பது கண்டறியப்பட்டது. கண் குழியின் உட்புற தசைப்பகுதிக்குள், கண் அசைவை கட்டுப்படுத்துகின்ற தசைகளால் சூழப்பட்ட ஒரு இடத்தில் அக்கட்டி அமைந்திருந்தது.  இன்ட்ராகோனல் டெர்மாய்டு என அழைக்கப்படுகின்ற இப்பாதிப்பு மிகவும் அரிதானதாகும்; உலகளவில் இதுவரை சுமார் 40 நபர்களுக்கு மட்டுமே இப்பாதிப்பு இருந்ததாக தரவுகள் கூறுகின்றன, இரண்டாவது நோயாளியான 40 வயதான ஒரு விவசாயிக்கு வலது கண்ணில் 11x7x6 செ.மீ. என்ற அளவுள்ள ஒரு பெரிய கட்டி இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது.  எக்ஸ்ட்ராகோனல் எபிடெர்மாய்டு என அழைக்கப்படும் இப்பாதிப்பு நிலையில் அக்கட்டி, மூளை மற்றும் மண்டையோட்டின் அடிப்பகுதி வரை நீண்டிருந்தது. உலகளவில், இதுநாள் வரை இதே போன்ற 60 நேர்வுகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன, இந்த இரண்டு சிகிச்சையும் நரம்பியல் அறுவைசிகிச்சை அணுகுமுறைகளைப் பயன்படுத்தி மூளை நரம்பியல் அறுவைசிகிச்சையின் முதுநிலை நிபுணரான டாக்டர் அருண்குமார் தலைமையிலான டாக்டர்கள் பிரவீன், அரிமாணிக்கம் உள்ளிட்ட அறுவை சிகிச்சைக் குழுவினர் தற்போது வெற்றிகரமாக செய்துள்ளனர்