தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சரும் தஞ்சை பாராளுமன்ற தொகுதி எம்பியுமான எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் சகோதரரும் மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக தலைவரும் மனித நேய பண்பாளருமான வழக்கறிஞர் எஸ்.எஸ்.ராஜ்குமார் அவர்களின் பிறந்தநாள் விழாவினை திமுக நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கியும்,ஆதரவற்றோருக்கு உணவுகள் வழங்கியும் கொண்டாடினர், வழக்கறிஞர் ராஜ்குமாருக்கு திமுக நிர்வாகிகள், வணிகர்கள், தொழிலதிபர்கள், தொண்டர்கள், நண்பர்கள் என வாழ்த்து தெரிவித்தும்,சால்வை அணிவித்தும், புத்தகங்கள் வழங்கியும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர், மேலும் தஞ்சை அரசினர் ராசா மிராசுதார் மருத்துவமனையில் மார்கெட் ராஜ் ஏற்பாட்டில் நோயாளிகளின் உறவினர்களுக்கு இனிப்பு மற்றும் உணவு வழங்கப்பட்டது, அதைப்போல் குழந்தைகள் சீர்திருத்தப்பள்ளியில் அழகிரி தமிழ்செல்வன் ஏற்பாட்டில் குழந்தைகளுக்கு மதிய உணவும் மானம்புசாவடி அன்பு இல்லத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு லெனின் ஏற்பாட்டில் மதிய உணவும் பன்னீர் செல்வம், குலோத்துங்கன் ஏற்பாட்டில் உணவும், மாரியம்மன் கோவில் பகுதியில் வெங்கட்,விக்னேஸ் ஏற்பாட்டில் அன்னதானமும் வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் முன்னாள் ஒன்றிய செயலாளர் தியாக இளங்கோ,முன்னாள் கவுன்சிலர் குமார், இளங்கோவன், ஜெயகாந்த், லெனின், அழகிரி, ராஜ், திருவள்ளுவன், சதாசிவம், ஜெயராஜ் கருப்பையன், சக்திவேல், பன்னீர்,ஆறுமுகம்,விஜய் சரவணன், கண்ணப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.








































Users Today : 0
Users Yesterday : 1
Total Users : 34315
Views Today :
Views Yesterday : 2
Total views : 65267
Who's Online : 0




