சொத்தின் மீது கடன் வழங்குவதற்காக தஞ்சாவூரில் ஈசிஎல் பைனான்ஸ்’-ன் புதிய கிளை திறப்பு

3

எடெல்வைஸ் பைனான்சியல் சர்வீசஸ் (Edelweiss Financial Services Limited) நிறுவனத்தின் ஒரு அங்கமான ‘ஈசிஎல் பைனான்ஸ் லிமிடெட், தமிழ்நாட்டில் தனது 6-வது கிளையை  தஞ்சாவூரில் தொடங்கி உள்ளது,சிறு மற்றும் குறு வணிகர்களுக்கு சொத்துக்களின் மீது கடன் வழங்குவதற்காக இந்த கிளை  செயல்படும். சிறிய தொழில்,வணிக நிறுவனங்களுக்கான LAP கடன் திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
#கடன் அளவு:  சிறு தொழில் முனைவோர் ரூ. 50 லட்சம் வரை கடன் பெறலாம்.
#தகுதி: வீடு,வணிக வளாகம் அல்லது தொழிற்சாலைக் கட்டிடங்களை அடமானமாக வைத்து கடன் பெறலாம்.
·# நன்மைகள்: எளிய ஆவண நடைமுறைகள், விரைவான மதிப்பீடு மற்றும் துரிதமான கடன் பட்டுவாடா மூலம் சிறு தொழில்களின் வளர்ச்சிக்கு இது உதவும். இவ்விழாவில் ஈசிஎல் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அஜய் குரானா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்