Home Blog
தமிழகத்தில் தஞ்சாவூர் மாநகராட்சி மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது, இதற்கான விண்ணப்பத்தினை முனிசிபல் அலுவலகத்தில் கேட்டு பெற்றுக் கொள்ளவும் என்ற தகவல் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது, இதனையடுத்து அந்த செய்தியின் உண்மை தன்மையை அறியாமல் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முனிசிபல் அலுவலகத்திற்கு வந்து விண்ணப்பம் கேட்கின்றனர், இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர், முனிசிபல் அலுவலகத்தில் ஊக்கத் தொகைக்கு என எந்த விண்ணப்பமும் வழங்குவதில்லை, இது தவறான...
தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேஷன் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது, அதைப்போல் தஞ்சையை அடுத்துள்ள மருங்குளம் மதர் தெரசா ஜாய் ஹோமில் முதியோர்களை பராமரித்து வருகிறது, இந்த முதியோர் இல்லத்தில் முதியோர்களை பராமரிக்கும் பணிக்கு சேவை உள்ளம் கொண்ட நபர்கள் தேவை, அங்கு தங்கி பணிபுரிய விருப்பம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், உணவு, இருப்பிடம், ஆகியவை இலவசம் மற்றும் தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும், தொடர்புக்கு: 98424 03026/98424 03039/ 80125 70027 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் Kyphoscoliosis என்ற நோயால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் இருந்த 15 வயது சிறுவனுக்கு முதுகுத் தண்டு அறுவை சிகிச்சை செய்து சிறுவனை நடக்க வைத்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர், இந்த நோயின் தன்மை குறித்து எலும்பியல் மற்றும் விபத்து சிகிச்சை பிரிவின் முது நிலை நிபுணர் டாக்டர் பார்த்திபன்கூறும்போது,சிறுவன் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை பிரிவுக்கு கை, கால்களில் பலவீனம் மற்றும் கால் தசைகளில் விரைப்புத்தன்மை ஆகிய பிரச்சனையுடன் வந்தார்,இந்த பிரச்சனை காரணமாக அவர் சக்கர நாற்காலியை பயன்படுத்தினார், இந்த...
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில் பயோநெஸ்ட் தொகுப்பு அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் தமிழ்நாடு பயோநெஸ்ட் தொகுப்பின் (கிளஸ்டர்) 10 புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன.இந்நிகழ்ச்சியில் பைராக் பயோடெக் துறைக்கான தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் மேக் இன் இந்தியா வசதிப் பிரிவுத் தலைவர் மணீஷ் திவான் தொடக்கி வைத்து பயோநெஸ்ட் தொகுப்பு தொழில் வளர்ப்பகங்களின் கிளின் கிரீன் டெக், நோயறிதல், உணவு தர மதிப்பீடு, உதவி சாதனங்கள், மூலக்கூறு உயிரியல் கருவிகள் உள்ளிட்ட புதிய தயாரிப்புகளை வெளியிட்டார்.இதில், உணவு சேமிப்புக் கிடங்கில்...
தஞ்சை பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை ஸ்ரீபெருவுடையார் திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும், இக்கோவில் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாய் திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் சிறந்து விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம், அதன்படி இவ்விழா கடந்த 17ந்தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.இவ்விழாவில் தினமும் மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெற்று வந்தது, அதைப்போல் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கள் (1.5.23) அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.முன்னதாக அதிகாலை...
தஞ்சாவூரில் அதிமுக கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசும்போது, முழுமையாக இரண்டு ஆண்டுகள் முடியாத நிலையில் திமுக ஆட்சி எப்போது செல்லும் என்று மக்கள் கேட்கின்றனர்,அதிமுக ஆட்சியை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், திமுக எதிர்க்கட்சி, திமுகவை எதிர்த்து தான் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார், எதிர்க்கட்சி திமுக என்பதில் இபிஎஸ் உறுதியாக உள்ளார், ஆனால் ஓபிஎஸ் போல் கும்பிடு போட்டு கொண்டு இருக்க மாட்டார், உறுதியான தலைவராக...
அதிமுக கட்சியில் இபிஎஸ் தலைமையில் ஒரு அணியாகவும் ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்டு வந்தனர், இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளராக தன்னை ( இபிஎஸ்) அங்கீகரிக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார், இதனை எதிர்த்து ஓபிஎஸ் சார்பில் மனுவும் அளிக்கப்பட்டு இருந்தது, இதனையடுத்து விசாரணை செய்த தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்து உத்தரவிட்டுள்ளது, இதனையடுத்து தஞ்சாவூரில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திருஞானம், முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், பால்வளத் தலைவர் காந்தி உள்ளிட்டோர் தலைமையில்...
விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in, https://www.tnpsc.gov.in/ www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையத்தளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், இணைய மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 11.5.2023 கல்வித் தகுதி A degree of any of the Universities recognized by the University Grants Commission.
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் இதய மின்னியங்கியல் மற்றும் இதய செயலிழப்பு கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது, மாரடைப்புகள் உட்பட அவசர நிலை, இதய சிகிச்சை, இதய நாளம் தொடர்பான நோய் அறிதல், இதய வாழ்வு பழுது நீக்கல்கள், இதய செயலிழப்பு உட்பட அனைத்து வகை இதய நோய்களுக்கான சிகிச்சைகள், இதய அறுவை சிகிச்சைகள் ஆகியவை இந்த மின் இயங்கியல் மூலம் செய்யப்படுகிறது இதுகுறித்து இதயவியல் சிகிச்சை துறையின் தலைவர் டாக்டர் கேசவமூர்த்தி கூறும் போது, மாரடைப்பும் இதய செயலிழப்பும் இதயத்தை பாதிக்கின்ற கடுமையான மருத்துவ...
அதிமுக கட்சியில் இபிஎஸ் தலைமையில் ஒரு அணியாகவும், ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்டு வந்த நிலையில் பொதுக்குழு கூட்டம் செல்லாது, பொதுகுழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது, என்று ஓபிஎஸ் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது, மேலும் அதிமுக இபிஎஸ் அணி சார்பில் அறிவிக்கப்பட்ட பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பு செல்லாது என்று அறிவிக்ககோரி ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர், இந்த வழக்கின் தீர்ப்பு செவ்வாய் அன்று வெளியானது, அதில் அதிமுக பொதுக்குழு...

விளம்பரங்கள்

- Advertisement -

Our Visitor

027128
Users Today : 6
Users Yesterday : 21
Total Users : 27128
Views Today : 25
Views Yesterday : 52
Total views : 41754
Who's Online : 0
error: Content is protected !!