தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் இலவசமாக வழங்கி வருகிறது.கை கால் இயக்க குறைபாடு மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்டவர்கள் தையல் இயந்திரம் பெற விண்ணப் பிக்கலாம். மிதமான மனவளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்ட மன வளர்ச்சி குன்றியவர்களின் பெற்றோர்களும் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப் பிக்கலாம்.தையல் இயந்திரம் பெற வயது 18 முதல் 45க்குள் உள்ளவராக இருக்க வேண்டும், தையல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் 04362-236791-ல் தொடர்பு கொள்ளலாம். தையல் இயந்திரம் பெறுவதற்கான விண்ணப்பத்துடன் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், கல்விச்சான்று வயதுச்சான்று, தையல் பயிற்சி சான்று புகைப்படம். ஆகியவை இணைக்கப்பட வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுநாள் வரை தையல் இயந்திரம் பெறாத மேற் குறிப்பிடப்பட்டுள்ள தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்கள் விண்ணப்பங்களை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறை எண் 14ல் செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார் குறிப்பு :உங்களால் யாரேனும் ஒருவர் பயன் பெற அதிகம் ஷேர் செய்யவும்







































Users Today : 1
Users Yesterday : 1
Total Users : 34564
Views Today : 1
Views Yesterday : 1
Total views : 65734
Who's Online : 0




