தஞ்சாவூர் மத்திய அரசின் இந்திய உணவு பதன தொழில்நுட்பக்கழகத்தில் தமிழக அளவிலான பிரதம மந்திரி குறுந்தொழில் உணவு பதன்செய் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்ட செயல் விளக்க இணைய வழி கருத்தரங்கம்தஞ்சாவூரில் புதுக்கோட்டை சாலையில் உள்ள ஐஐஎப்பிடி நிறுவனத்தில் தமிழக அளவிலான பிரதம மந்திரி குறுந்தொழில் உணவு பதன்செய் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்ட செயல் விளக்க இணைய வழி கருத்தரங்கம் வரும் 23ந்தேதி காலை10மணிக்கு நடைபெற உள்ளது,இக்கருத்தரங்கின் சிறப்பு அம்சங்கள் குறுந்தொழில் நிறுவனங்களை மேம்படுத்துதல்,35 சதவீத மானியத்துடன் கூடிய கடன் அதிகபட்சமாக ரூ 10 லட்சம்,சுயஉதவி குழுக்களுக்கு தொழில் தொடங்குவதற்கான முதல் மூலதனம்,சந்தைப்படுத்துவதற்கான 50 சதவீத மானியம் ஆகும்,பயிற்சி உள்ளடக்கம் நடுத்தர உணவு பதன்செய் நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் மற்றும் தொழில் நுட்பங்கள் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு விளக்கம்,சான்றிதழ் உரிமம் பெறுதல் மற்றும் அதன் அவசியங்கள் பேக்கேஜிங்,லேபிலிங்,பிராண்டிங் மற்றும் சந்தை வாய்ப்புகள் நிதி ஆதாரங்கள் மற்றும் வாய்ப்புகளை தெரிந்து கொள்ள முடியும்.இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி ஐஐஎப்பிடி இயக்குநர் முனைவர் அனந்தராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விளக்கவுரை ஆற்றுகின்றனர்.







































Users Today : 2
Users Yesterday : 2
Total Users : 34319
Views Today : 8
Views Yesterday : 2
Total views : 65277
Who's Online : 0




