இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி தஞ்சாவூர் மாவட்ட கிளை சார்பாக மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வழிகாட்டுதலில் போதை பொருள் எதிர்ப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் ரெட்கிராஸ் மாவட்ட சேர்மன் டாக்டர் வரதராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட காவல் எஸ்பி இராஜாராம் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள், இதில் சரபோஜி அரசு கல்லூரியை சார்ந்த 500 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு போதைப் பொருள் எதிர்ப்பு மற்றும் தற்கொலை தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை துணை ஆணையர் ரேணுகாதேவி, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். விஜய லலிதாம்பிகை, கல்லூரி முதல்வர் (பொ) முனைவர். ராணி, மாவட்ட மனநல திட்ட மருத்துவர் புவனேஸ்வரி மற்றும் காவல் ஆய்வாளர் பகவதி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்கள், ரெட்கிராஸ் இரத்த வங்கி ஆலோசகர் டாக்டர் குணசேகரன், ரெட்கிராஸ் கலைச் செல்வன், ஷேக் நாசர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்,இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ரெட்கிராஸ் மாவட்ட துணை சேர்மன் முத்துக்குமார் செய்திருந்தார்.
