தஞ்சாவூரில் தலைக்கவசம் அணிதல்  போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு, சிலம்பம் சுற்றியவாறு 3 கி.மீட்டர் தூரம் நடைபயணம்

13

தஞ்சாவூர் ஸ்டார் குளோபல் இன்டர்நேஷனல்  சார்பில் தலைக்கவசம்  உயிர் கவசம் அணிதல், போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு அல்டிமேட் சாதனை முயற்சி தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியை காவல் ஆய்வாளர் சுதா தொடங்கி வைத்தார், இதில் நூற்றுக்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் கலந்து கொண்டு சிலம்பத்தை கைகளால் சுற்றிக்கொண்டு சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தலைக்கவசம் அணிய வேண்டும், போதைப் பொருள் எதிர்ப்பு ஆகிய விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டனர், இதில் டாக்டர் முகமது சபீர், டாக்டர் சிவக்குமார், ஊழல் எதிர்ப்பு கண்காணிப்பு கவுன்சில் தலைவர் சாம் பிரகாஷ் உள்ளிட்ட பள்ளி மாணவ, மாணவிகள், சிலம்ப வீரர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

சிலம்பம் சுற்றியவாறு வீரர்கள்