தஞ்சாவூரில் அதிநவீன சிறுதுளை (MICS) இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை

53

தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் அனு மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த கமலவேலு (55)  என்பவருக்கு அதிநவீன இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது, இந்த அறுவை சிகிச்சைகள் அனைத்தும் பல இரத்தக்குழாய் இணைப்பு முறையில் மேற்கொள்ளப்பட்டன,பழமையான திறந்த இதய அறுவை சிகிச்சையுடன் ஒப்பிடும்போது இந்த புதிய அதிநவீன முறை சிகிச்சையில் மார்பின் இடப்பக்கத்தில் சிறிய வெட்டின் வழியாக அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது, இதில் மார்பு எலும்பு வெட்டப்படாது என்பதனால் நோயாளிக்கு ஏற்படும் உடல் பாதிப்பு குறைவாகவும், குணமடையும் காலம் வேகமாகவும் அமைகிறது. வழக்கமான பைபாஸ் அறுவை சிகிச்சைவிட இயல்பு வாழ்கைக்குத் திரும்பும் நேரம் குறைவாக இருந்தது என மருத்துவமனையின் இதய நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆஷிக் நிஹ்மத்துல்லா கூறினார், இந்த சிகிச்சைகள் அனு மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் செய்யப்படுகிறது என மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் R.V.சிவகுமார் தெரிவித்தார்