ரெட் சிண்ட்ரோம் எனும் அரிதான நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமிக்கு வெற்றிகரமாக தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிக்கலும் இடரும் மிகுந்த இப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது. அறுவை சிகிச்சை நிபுணர்கள், சிகிச்சை நடைபெற்றபோதே இண்ட்ரா ஆபரேடிவ் நியூரோ மானிட்டரிங் என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நோயாளியின் முதுகுத் தண்டுவடம், நரம்புகள் செயல்பாட்டைக் கண்காணித்து பாதுகாப்பான, துல்லியமான சிகிச்சையை உறுதி செய்தனர். ஸ்கோலியாசிஸ் என்பது, அசாதாரணமான நிலையில் முதுகுத்தண்டுவடம் வளைந்த பிரச்சனை அகும். அதேபோல ரெட் சிண்ட்ரோம் என்பது பெண் குழந்தைகளைத் தாக்கும் ஒரு பிரச்சனையாகும். நரம்புக் கோளாறான இது, மூளை வளர்ச்சியைப் பாதிக்கும் தன்மையுடையது. இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சை, முதுகுத்தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் கார்த்திகேயன் தலைமையில் மருத்துவர்கள் பார்த்திபன், சண்முகஹரி, பாலகுருநாதன், அரிமாணிக்கம், வினோதா தேவி உள்ளடக்கிய குழுவின் உதவியுடன் இச்சிகிச்சை நடைபெற்றது.







































Users Today : 1
Users Yesterday : 2
Total Users : 34563
Views Today : 1
Views Yesterday : 2
Total views : 65733
Who's Online : 0




