தஞ்சாவூரில் விபத்தில் காயமடைபவர்களுக்கும் மற்றும் உடல்நல அவசரநிலைகளை எதிர்கொள்பவர்களுக்கும் சிகிச்சையளிக்க உயர் வசதிகள் கொண்ட அவசரநிலை ஊர்தி சேவை மற்றும் விரைவான பதில்வினை சிகிச்சைக்குழுவின் ஆதரவோடு இயங்கும் ஹெல்ப்லைன் சேவையை தஞ்சாவூர் மாநகராட்சியின் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி தொடங்கி வைத்தார், தஞ்சாவூரில் பல்வேறு துறைகளுடன் உயர்சிகிச்சை வழங்கும் மீனாட்சி மருத்துவமனை, மருத்துவ அவசரநிலைகளை எதிர்கொள்ளும் நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் தொடர்புகொள்ள ஒரு பிரத்யேக உதவி எண் சேவையை (7502506666) தொடங்கியிருக்கிறது. சாலைப் போக்குவரத்து விபத்தில் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் , பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான அவசரநிலைகளை எதிர்கொள்பவர்களுக்கு இச்சேவை பெரும் உதவியாக இருக்கும்,
துணைமேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி பேசுகையில், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முதலுதவியும், அவசரநிலை சிகிச்சையும் உரிய நேரத்திற்குள் வழங்கப்பட்டால், மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுவதற்கு முன்பே நிகழும் இறப்புகளில் குறைந்தபட்சம் 50 சதவீதம் தவிர்க்க முடியும் என்று பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டிருக்கும் ஆய்வுகள் கூறுகின்றன, ஆகவே இந்த ஹெல்ப்லைனில் திட்டத்தை அறிமுகம் செய்வது பொது மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று பேசினார், இதில் டாக்டர்கள் பிரவீன், கேசவமூர்த்தி, சண்முக ஜெயந்தன், அருண்குமார், சரவணவேல், பார்த்திபன், காமேஷ் அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்









































Users Today : 1
Users Yesterday : 2
Total Users : 34563
Views Today : 1
Views Yesterday : 2
Total views : 65733
Who's Online : 0




