டெல்டாவில் சிறந்த பல்நோக்கு மருத்துவமனைக்கான AHPICON விருது, தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை வென்றது

120

டெல்டாவில் மிகப்பெரிய பல்நோக்கு மருத்துவமனையான தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை, அகில இந்திய மருத்துவமனைகளின் சங்கம் (AHPI) நிறுவிய சிறந்த பல்நோக்கு மருத்துவமனைக்கான விருதை, மருத்துவ சேவைத் துறையில் சுற்றுச்சூழல் மற்றும் நிதி நிலைத் தன்மையை மையமாகக் கொண்ட ஒரு நாள் மாநாடு மற்றும் கண்காட்சியான AHPICON 2024-இல் பெற்றுள்ளது,தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதில் சிறந்து விளங்குவதற்காக, தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு அளவிலான 15 மருத்துவமனைகளை, AHPICON 2024 அங்கீகரித்துள்ளது, இந்த விருதினை தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் அவசர மருத்துவப் பிரிவின் தலைவர் மருத்துவர் சரவணவேல், பொது மேலாளர்கள் மருத்துவர் பாலமுருகன், சிவக்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்,