தீபாவளி பண்டிகையை முன்னிட்டு
தஞ்சாவூர் மானம்புசாவடியில் உள்ள ஆதரவற்றோருக்கான இல்லத்தில் தங்கி இருக்கும் முதியவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுடன் மாநகராட்சி மேயர் இராமநாதன் பட்டாசு வெடித்து, காலை சிற்றுண்டி பரிமாறி அவர்களுக்கு உணவு ஊட்டி ஒன்றாக உணவருந்தி தீபாவளியை கொண்டாடினார். பின்னர் அங்குள்ளவர்களின் குறைகளை கேட்டறிந்தார், முன்னதாக இந்த இல்லத்தில் தங்கி இருக்கும் 25 பேருக்கும் மேயர் இராமநாதன் புத்தாடைகள் வழங்கி. அவர்களுடன் சேர்ந்து மத்தாப்பு கொளுத்தி மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாடினார், மேலும் அவர்களுடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டு
மகனாக உங்களுக்கு நான் இருக்கிறேன் என ஆறுதல் வார்த்தை கூறினார், இதில் லயன்ஸ் கிளப் ராஜா, போட்டோ மதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர், அதைப்போல் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் எம்எல்ஏ டிகேஜி நீலமேகம், முதியவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி அவர்களுடன் அமர்ந்து பேசி மகிழ்ந்தார், மேலும் முதியவர்கள் மத்தாப்புகளை கொளுத்தி சிறுவர்களைப் போல் மகிழ்ச்சி அடைந்தனர், இதில் பகுதி செயலாளர் நீலகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர், எம்எல்ஏ மற்றும் மேயரின் இந்த செயல் முதியவர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது,

