தஞ்சாவூர் தளவாபாளையம் பகுதியில் புதிய பேருந்து சேவையை எம்பி கல்யாணசுந்தரம் தொடங்கி வைத்தார்

537

தஞ்சையை அடுத்த தளவாபாளையம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக புதிய பேருந்து வசதி வேண்டும் என்பது இருந்து வந்தது, இதனையடுத்து இக்கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி புதிய பேருந்து சேவை வசதி தொடங்கப்பட்டது, தஞ்சையிலிருந்து சாரநாத் நகர், தைக்கால், தளவாபாளையம், மருங்கை, கத்திரிநத்தம், குளிச்சப்பட்டு ஆகிய ஊர்களுக்கு சென்று வர இந்த வழித்தடத்தில் பேருந்து வசதியினை எம்பி கல்யாணசுந்தரம் கொடியசைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தொடங்கி வைத்தார்,இந்நிகழ்ச்சியில் அம்மாபேட்டை ஒன்றிய பெருந்தலைவர் கலைச்செல்வன், வடக்கு ஒன்றிய செயலாளர் அம்மாபேட்டை சுரேஷ், கத்திரிநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் வனமூர்த்தி,கும்பகோணம் கோட்ட போக்குவரத்து மேலாளர் பாலமுருகன், உதவி பொறியாளர் கருப்பசாமி,உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்