தமிழக அரசு காவிரி தண்ணீரை பெற்றுத்தர கோரி டெல்டா மாவட்டங்களில் 6ந் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் தகவல்

371

தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் மத்திய மாவட்டம் (தஞ்சாவூர், ஒரத்தநாடு) அதிமுக சார்பில் மாவட்ட செயலாளராக சேகர், மாநகர செயலாளராக சரவணன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளாக அதிமுக சார்பில் பொதுச் செயலாளர் இபிஎஸ்  நியமித்தார்,இதனையடுத்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக புறப்பட்டு தஞ்சை ரயிலடி  பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவ சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், பின்னர் காமராஜ் பேசும்போது மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படவில்லை, எனவே மக்கள் விரோத ஆட்சி நடைபெறுகிறது, தஞ்சை தரணி தண்ணீர் இல்லாமல் விவசாயம் காய்ந்து போய் உள்ளது, நமக்கு உரிய தண்ணீரை காவிரியில் இருந்து பெற்று தர தகுதி இல்லாத அரசாங்கம், முதலமைச்சர் இருந்து வருகிறார், கர்நாடகாவில் தண்ணீர் தர மறுக்கிறார்கள், உரிய காலத்தில் நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்றுத் தராத அரசாங்கமாக திமுக இருக்கிறது, எனவே தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 5 டெல்டா மாவட்டங்களில் வருகின்ற 6 ந்தேதி மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்றும், சம்பா சாகுபடி செய்ய முடியுமா என்று விவசாயிகள் ஏக்கத்தில் உள்ளனர், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 35 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திம், கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று தெரிவித்தார், இந்நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திருஞானம், பால்வளத் தலைவர் காந்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்