தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைகழகத்தில் 31 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவரும், பல்கலைக் கழகத்தின் வேந்தருமான கி.வீரமணி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார், இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார், பின்னர் பேட்டியளித்த கி.வீரமணி கூறும்போது, சனாதானம் என்றால் என்ன என்று குழப்பிக் கொண்டு இருந்தார்கள், இப்போது அது என்ன என்பதை நீதிமன்றத்தில் சொல்வதற்கு எங்களுக்கு நல்வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நீட் ஜீரோ ஆகிவிட்டது என்று மத்திய அரசே ஒப்புக் கொண்டு விட்டது, அவர்களே ஜீரோவாக்கி விட்டார்கள், நாங்கள் ஆக்கவில்லை, நீட் தேர்வு அதன் நோக்கத்தை எந்த வகையிலும் அதன் நோக்கத்தை நிறைவேற்றவில்லை என்று மத்திய அரசே ஒப்புக் கொண்டு விட்டதற்கான அடையாளம் இது,நீட் தேர்வு நடத்தியும் எந்த பயனும் இல்லை என்று தெரிந்து விட்ட பின்னரும் நீட் தேர்வு நடத்துவற்கான காரணம் கார்ப்பரேட்டுகள் கொள்ளை அடிப்பதற்காகவே என்று புரிந்து கொள்ள வேண்டும், இன்னும் ஆறு மாதத்தில் ஆட்சி மாறும், காட்சி மாறும், நீட் ஜீரோ ஆகும் என்றும் மகளிர் இட ஒதுக்கீடு கானல் நீர் போன்றது, அது வரும் ஆனால் வராது, என்று தெரிவித்தார்.