தஞ்சாவூரில் புனித அன்னை தெரசா பிறந்த நாள் விழா,கல்வி உதவித்தொகை வழங்கி உற்சாக கொண்டாட்டம்

640

தஞ்சாவூர் மதர்தெரசா பவுண்டேஷன் பல்வேறு சமூகப் பணிகளை வழங்கி வருகிறது, இந்நிலையில் புனித அன்னை தெரசாவின் 113 ஆவது பிறந்தநாள் விழா மாதாக்கோட்டை ரோடு அன்பு இல்லத்தில் நடைபெற்றது, இவ்விழாவில் ஏழை,எளிய மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை தொடர கல்வி உதவித் தொகையாக சுமார் 6.50 லட்சம் நிதி வழங்கப்பட்டது, மேலும் தையல் இயந்திரம், வாக்கர் ஆகியவையும் வழங்கப்பட்டது, இவ்விழாவில் மனித நேய பண்பாளர் வழக்கறிஞர் எஸ்.எஸ். ராஜ்குமார், திரைப்பட நடிகர் கும்கி புகழ் ஜோமல்லூரி, மாநகராட்சி மேயர் ராமநாதன், தொழில் வர்த்தக சங்கத்தின் முன்னாள் தலைவர் பாலசுந்தரம், உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர், மதர்தெரசா பவுண்டேஷன் சேர்மன் சவரிமுத்து வரவேற்புரை ஆற்றினார், இவ்விழாவில் அறங்காவலர் கோவிந்தராஜ் நன்றி தெரிவித்தார், விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் முரளி கிருஷ்ணன் தலைமையில் திட்ட இயக்குனர் ரத்தீஷ்குமார், தளவாட மேலாளர் ஜெரோம், நிர்வாக மேலாளர் மெர்சி, மக்கள் தொடர்பு அலுவலர்கள் நாகராணி, ரேணுகா மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கிறிஸ்டி, அமிர்தவர்ஷினி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர், இவ்விழாவில் ஏராளமான பொதுமக்கள்,பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 43 = 50