டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகள் பயன் பெறும் வகையில் கல்லீரல் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை மற்றும் கல்லீரல் பித்தநீர் சார்ந்த அறுவை சிகிச்சைகளை வழங்குவதற்காக தஞ்சாவூரில் மீனாட்சி மருத்துவமனையும் மற்றும் சென்னையில் உயர்சிகிச்சை அளிக்கும் கிளெனீகில்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையும் கூட்டு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன, அதன்படி கிளெனீகில்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின் நிபுணர்கள், தஞ்சாவூரிலுள்ள மீனாட்சி மருத்துவமனைக்கு நேரில் வருகை தந்து வெளிநோயாளிகளுக்கான மருத்துவ ஆலோசனை வழங்குவார்கள், மேலும் நவீன, அறுவை சிகிச்சைக்கான வசதிகளை பயன்படுத்தி கல்லீரல் உறுப்புமாற்று அறுவை சிகிச்சையும் மேற்கொள்வர், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மீனாட்சி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ரவிச்சந்திரன் மற்றும் கிளெனீகில்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை சார்பாக கல்லீரல் உறுப்புமாற்று அறுவை சிகிச்சைப் பிரிவின் இயக்குனர் டாக்டர் ஜாய் வர்கீஸ் அவர்களும் கையொப்பமிட்டனர். இந்நிகழ்ச்சியில் மீனாட்சி மருத்துவமனை டாக்டர்கள் பிரசன்னா,அரிமாணிக்கம், பாலமுருகன், மார்கெட்டிங் பொது மேலாளர் சிவகுமார் மற்றும் கிளெனீகில்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை கார்ப்பரேட் துறை தலைவர் பாஸ்கர் ரெட்டி மற்றும் கல்லீரல் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை துறை இயக்குனர் டாக்டர் மேட்டு ஸ்ரீனிவாஸ் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது