தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் சுற்றுப்பாதை இரத்தக்குழாய் நீக்கம்’ என்ற புதுமையான மருத்துவ செயல்முறையை 78 வயதான நோயாளிக்கு வெற்றிகரமாக செய்துள்ளது, உடைப்பதற்கு மிகவும் கடினமான, அதிக சுண்ணாம்பு காரை ஏறிய கரோனரி படிமங்கள் என்ற இருதய பிரச்சனைக்கு தீர்வுகாண, கதீட்டர் அடிப்படையிலான மேம்பட்ட இச்செயல் உத்தியை மருத்துவர்கள் மேற்கொண்டனர். காரைக்காலைச் சேர்ந்த முதியவரான குருநாதன் (78) என்பவருக்கு கரோனரி தமனி பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு உகந்ததாக அவரது இரத்தநாளங்களின் உடற்கூறியல் இருக்கவில்லை. எனவே தமனியில் ஸ்டென்ட் பொருத்துவதற்கு முன்பு ‘சுற்றுப்பாதை இரத்தக்குழாய் நீக்கம்’ (Orbital Atherectomy) கருவியைப் பயன்படுத்தி தமனிகளிலிருந்த சுண்ணாம்பு காரையை (கால்சியம்) மருத்துவர்கள் குழு வெற்றிகரமாக அகற்றியது.சுற்றுப்பாதை இரத்தக்குழாய் நீக்கம்’ என்பது, இச்செயல்முறையில் மிக நவீன செயல் உத்தியாகும். தமனிகளின் உட்புற பகுதியை விரிவாக்குவதற்கு ஒரு தனித்துவ இயங்குமுறையை இதன் சுழற்சி ரீதியிலான இயக்கம் வழங்குவதும் மற்றும் தமனியின் சுவர்களுக்கு சேதம் விளைவிக்கும் இடரை மிகவும் குறைப்பதுமே இந்த நவீன மருத்துவ செயல்முறையாகும், சுற்றுப்பாதை இரத்தக்குழாய் நீக்கம் மூலம் 4 மி.மீட்டர் வரை தமனிக்குழலை விரிவுபடுத்த முடியும்.சுழற்சி இரத்தக்குழாய் நீக்கம் போன்ற பிற இரத்தக்குழாய் நீக்க செயல்களால் வழக்கமாக எட்டப்படக்கூடிய 1.75 மி.மீட்டர் அளவை விட இது மிகவும் அதிகமாகும். இதயவியல் துறை தலைவர் டாக்டர் கேசவமூர்த்தி கூறும்போது, சுற்றுப்பாதை இரத்தக்குழாய் நீக்க செயல்முறையின் போது வைரப்பூச்சினை தலைப்பகுதி முனையில் கொண்டிருக்கும் ஒரு கதீட்டர், குறுகலாகியிருக்கும் தமனிக்குள் கால்சிய படிம உறைக்கட்டி இருக்கும் இடத்தை நோக்கிய உட் செலுத்தப்படுகிறது. அந்த இடத்தை கதீட்டர் சென்றடைந்தவுடன், ஒரு நிமிடத்திற்கு 60,000 முதல் 200,000 சுழற்சிகள் என்ற அதிக வேகத்தில் கதீட்டரின் கிரவுன் (தலைப்பகுதி) சுழல்கிறது. இந்த சுழற்சியானது, மையவிலக்கு ஆற்றலை உருவாக்குகிறது. கால்சியம் படிந்த உறைக்கட்டிகளை மென்மையாக சுரண்டி எடுக்கிறது. இச்செயல்முறை, கடினமான உறைகட்டியை சிறு துகள்களாக உடைத்து தமனிகளை வெற்றிகரமாக விரிவாக்குகிறது என்று கூறினார். இதில் டாக்டர்கள் ரவிச்சந்திரன் ஸ்ரீனிவாசன், சபரிகிருஷ்ணன் பிரவீன் ஆகியோர் கலந்து கொண்டனர்