தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைகழகம், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்துடன் இணைந்து இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம், ரூ 30 கோடி மதிப்பீட்டில் பயற்சி மையம்

363

ஆட்டோமொபைல் நிறுவனமான பஜாஜ் ஆட்டோ, பொறியியல் மற்றும் டிப்ளமோ பட்டதாரிகள்,இறுதியாண்டு மாணவர்களுக்கு வளர்ந்து வரும் பணியிட திறன்கள் குறித்து பயிற்றுவிப்பதற்காக பஜாஜ் பொறியியல் திறன் பயிற்சி (BEST) மையத்தை நிறுவுவதற்காக சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பஜாஜ் ஆட்டோவின் VP-CSR, சுதாகர் அவர்கள் கூறுகையில் ”2026 ஆம் ஆண்டுக்குள் உற்பத்தித் துறையில் 33 லட்சம் திறமையான பணியாளர்கள் தேவை என்று வாகன திறன் மேம்பாட்டு கவுன்சில் (ASDC) தீர்மானித்துள்ளது.
மெகாட்ரானிக்ஸ், சென்சார்கள் & கன்ட்ரோல், ரோபாட்டிக்ஸ் & ஆட்டோமேஷன் மற்றும் தொழில்துறை 4.0 மற்றும் மேம்பட்ட உற்பத்தி ஆகிய நான்கு வளர்ந்து வரும் பகுதிகளில் பயிற்சி வழங்கப்படும். ஒவ்வொரு மையமும் குறைந்தது 500 மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் அடுத்த ஐந்தாண்டுகளில் 25 ஆயிரம் பயிற்சி பெற்ற பட்டதாரிகள் உருவாக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார், சாஸ்த்ரா பல்கலைக்கழக சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட துணைவேந்தர் டாக்டர் வைத்தியசுப்பிரமணியம் கூறும்போது பஜாஜ் பொறியியல் திறன் பயிற்சி (BEST) மையத்தில் ரூ.30 கோடிக்கு மேல் முதலீடு செய்வதால், மாணவர்களுக்கு அதிநவீனமான மற்றும் விவேகமான பயிற்சிச் சூழல் வழங்கப்படும் என்று கூறினார். பஜாஜ் ஆட்டோமொபைல் சார்பாக ரமேஷ், தலைவர் – Skilling CSR, அவர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்நிகழ்ச்சியில் ஸ்னேகா கோன்ஜ், மேலாளர் – Assessment & Monitoring மற்றும்,விஜய் வாவேரே, கோட்ட மேலாளர் – Skilling CSR அவர்களும், சாஸ்த்ராவின் டீன்கள் மற்றும் அசோசியேட் டீன்களும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

64 − 63 =