காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையிலிருந்து தண்ணீர் திறப்பு,
அமைச்சர் கே.என்.நேரு, எம்பி பழநிமாணிக்கம் ஆகியோர் பங்கேற்பு

798

மேட்டூரிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தமிழக முதல்வர் கடந்த 12ந் தேதி தண்ணீரை திறந்து வைத்தார், இதனையடுத்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணையை வந்தடைந்தது, இந்நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு குறுவை மற்றும் சம்பா சாகுபடி பணிகளுக்கு தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது, இந்த தண்ணீரை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, எம்பி பழநிமாணிக்கம் ஆகியோர் காவிரி ஆறு, வெண்ணாறு கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளின் மதகு பொத்தானை அழுத்தி தண்ணீரை திறந்து வைத்து நெல் மணிகள் மற்றும் மலரை தூவினர், கல்லணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 500 கன அடியும், வெண்ணாற்றில் 500 கன அடியும், கல்லணை கால்வாயில் 100 கன அடியும், கொள்ளிடத்தில் 500 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.இந்நிகழ்ச்சியில் எம்பி கல்யாணசுந்தரம்,தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்,உள்ளிட்ட நாகை, திருவாரூர், கடலூர் மாவட்ட ஆட்சியர்கள், சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன், மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.