தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் சக்கர நாற்காலியில் இருந்த சிறுவனை நடக்க வைத்து மருத்துவர்கள் சாதனை

515

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் Kyphoscoliosis என்ற நோயால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் இருந்த 15 வயது சிறுவனுக்கு முதுகுத் தண்டு அறுவை சிகிச்சை செய்து சிறுவனை நடக்க வைத்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர், இந்த நோயின் தன்மை குறித்து எலும்பியல் மற்றும் விபத்து சிகிச்சை பிரிவின் முது நிலை நிபுணர் டாக்டர் பார்த்திபன்
கூறும்போது,சிறுவன் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை பிரிவுக்கு கை, கால்களில் பலவீனம் மற்றும் கால் தசைகளில் விரைப்புத்தன்மை ஆகிய பிரச்சனையுடன் வந்தார்,இந்த பிரச்சனை காரணமாக அவர் சக்கர நாற்காலியை பயன்படுத்தினார், இந்த நோயின் பெயர் Kyphoscoliosis ஆகும், அவரது முதுகுத் தண்டு எலும்புகளின் வளர்ச்சியில் ஒரு வளைவு ஏற்பட்டது, அதில் முதுகு தண்டின் செயல்பாடும் மோசமடைந்தது என்று தெரிவித்தார், இந்த அறுவை சிகிச்சை குறித்து முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை பிரிவின் முதுநிலை நிபுணர் டாக்டர் கார்த்திகேயன் கூறும்போது,அறுவை சிகிச்சையின் போது முதுகுத்தண்டு செயல்பாட்டை கண்காணிக்க இன்டரா ஆபரேட்டிவ் நியூரோமோனிடரிங் என்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அறுவை சிகிச்சைக்கு பிறகு அவரது கால் மூட்டுகள் வலிமை அடைந்தது, சிறுவனால் மூன்று வாரங்களில் யார் உதவியும் இன்றி நடக்க முடிந்தது,அவர் சக்கர நாற்காலில் இருந்து பழைய நிலைக்கு திரும்பி இருக்கிறார் என்று தெரிவித்தார், இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள் பிரவீன், அரிமாணிக்கம், பாலகுருநாதன், சண்முக ஹரிஹரன் மற்றும் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்