அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ், தேர்தல் ஆணையம் அங்கீகாரம், தஞ்சாவூரில் அதிமுகவினர் கொண்டாட்டம்

578

அதிமுக கட்சியில் இபிஎஸ் தலைமையில் ஒரு அணியாகவும் ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்டு வந்தனர், இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளராக தன்னை ( இபிஎஸ்) அங்கீகரிக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார், இதனை எதிர்த்து ஓபிஎஸ் சார்பில் மனுவும் அளிக்கப்பட்டு இருந்தது, இதனையடுத்து விசாரணை செய்த தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்து உத்தரவிட்டுள்ளது, இதனையடுத்து தஞ்சாவூரில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திருஞானம், முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், பால்வளத் தலைவர் காந்தி உள்ளிட்டோர் தலைமையில் தஞ்சை ரயிலடி அருகில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்,முன்னதாக முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்,இதில் அதிமுக கவுன்சிலர் கோபால்,கட்சி நிர்வாகிகள் ராஜமாணிக்கம்,பஞ்சாபிகேசன், கவுன்சிலர் தெட்சிணாமூர்த்தி உள்ளிட்ட தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்