அதிமுக கட்சியில் இபிஎஸ் தலைமையில் ஒரு அணியாகவும், ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்டு வந்த நிலையில் பொதுக்குழு கூட்டம் செல்லாது, பொதுகுழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது, என்று ஓபிஎஸ் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது, மேலும் அதிமுக இபிஎஸ் அணி சார்பில் அறிவிக்கப்பட்ட பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பு செல்லாது என்று அறிவிக்ககோரி ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர், இந்த வழக்கின் தீர்ப்பு செவ்வாய் அன்று வெளியானது, அதில் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லும் என்றும் பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை இல்லை என்றும் உத்தரவிட்டது, இதனையடுத்து தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக கட்சி (இபிஎஸ் அணி)சார்பில் தஞ்சை ரயிலடி பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவ சிலைகளுக்கு மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திருஞானம், முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், பால்வளத் தலைவர் காந்தி, நிக்கல்சன் கூட்டுறவு நகர வங்கி தலைவர் சரவணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், பின்னர் வெடி வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி எடப்பாடி பழனிச்சாமியை வாழ்த்தி கோஷம் எழுப்பினார்கள்,இதில் கவுன்சிலர் கோபால், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ராஜமாணிக்கம், கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி, 5வது வார்டு செயலாளர் சம்பத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்