தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் 5 பேருக்கு விருதுகள்

726

தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக் கழகத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி 28 ந் தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது,மேலும் சாஸ்திரா பல்கலைக் கழகத்தில் பல்வேறு துறைகளில் முன்னோடியாக பணியாற்றிய நாட்டின் விஞ்ஞானிகளை கௌரவித்து வருகிறது, அதைப்போல் தஞ்சையில் நடைபெற்ற விழாவில் டாடா எலக்ட்ரானிக்ஸின் தலைவர் டாக்டர் சரண் குருமூர்த்தி கலந்துகொண்டு தலா ரூபாய் 5 லட்சம் ரொக்க பரிசுடன் கூடிய விருதுகளை வழங்கினார், சாஸ்திரா ஒபைடு சித்திக் விருது மும்பை இந்திய தொழில் நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர் சமீர் K.மாஜிக்கும், இயற்பியலில் சிறந்து விளங்கியமைக்காக பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் பேராசிரியர் எல். ராமசாமிக்கு GN. ராமச்சந்திரன் விருதும், இந்திய அறிவியல் கழகத்தின் பேராசிரியர் S. நடராஜன் மற்றும் சென்னை தேசிய தொழில்நுட்ப கழகத்தின் பேராசிரியர் T. பிரதீப் ஆகியோருக்கு CNR RAO விருதும் வழங்கப்பட்டது, மேலும் மாஹே மணிபால் பேராசிரியர் M.S. வலியதனுக்கு இந்திய அறிவு அமைப்பிற்கு அவரது பங்களிப்பிற்காக மகாமானா விருதும் வழங்கப்பட்டது, மேலும் பெண் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் நிறுவப்பட்ட சாஸ்திரா சரோஜ் சந்திரசேகர் விருது 3 பேருக்கு வழங்கப்பட்டது, மற்றும் 10 பள்ளிகளுக்கு தலா 5 லட்சம் மதிப்புள்ள STEM ஆய்வக உபகரணங்கள் வழங்கப்பட்டன, இவ்விழாவில் சாஸ்திரா பல்கலைக்கழக முதன்மையர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்