தஞ்சாவூர் இன்னர் வீல் சங்கம் 1973-2023 தனது பொன்விழா ஆண்டை முன்னிட்டு பாரம்பரிய உடைகளுக்கான கௌரவத்தை மீட்டெடுக்கும் ஓர் உன்னத முயற்சியாக VKC PRIDE தஞ்சாவூர் இன்னர் வீல் சங்கம் சார்பில் புடவையில் ஓர் நடை பயணம் என்ற போட்டி வரும் 18.2.23 அன்று காலை 7 மணிக்கு தஞ்சை பெரிய கோவில் அருகில் நடைபெற உள்ளது, பெண்களுக்கு 4 கிலோ மீட்டர், 3 கிலோமீட்டர், 1 கிலோ மீட்டர் என வயது வாரியாக போட்டிகள் நடைபெறுகிறது, போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்க பரிசுத் தொகையும் சான்றிதழும் வழங்கப்படுகிறது, மேலும் கல்லூரி மாணவிகளுக்கு பதிவு கட்டணம் இல்லை என பொன்விழா குழு தலைவர் உஷா நந்தினி தெரிவித்துள்ளார், விழா ஏற்பாடுகளை இன்னர் வீல் சங்க தலைவர் டாக்டர் சோபியா, திட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகவடிவு, புவனா, முன்னாள் மாவட்ட தலைவர் சுந்தரி, நிர்மலா, சங்கீதா,சுஜித்ரா உள்ளிட்டோர் செய்து வருகின்றனர், மேலும் விபரங்களுக்கு இன்னர்வீல் சங்க நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்