தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 ரொக்க பணம், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது, அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 7,00,505 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 73 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட உள்ளது, இதனையடுத்து தஞ்சாவூரில் புதுஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை எம்பி எஸ்.எஸ்.பழநிமாணிக்கம்,மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் மேயர் ராமநாதன் துணை மேயர் அஞ்சுகம்பூபதி ஆகியோர் தொடங்கி வைத்தனர், இதைப்போல் 19 ஆவது வார்டு சீனிவாசபுரம் பகுதியில் வார்டு கவுன்சிலர் தமிழ்வாணன் மண்டல தலைவர் மேத்தா ஆகியோர் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினர், இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை,நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி Tcws தலைவர் பண்டரிநாதன், திமுக நிர்வாகிகள் கனகவல்லி பாலாஜி, வின்சென்ட், சுரேஷ், செக்கடி சுரேஷ், பிரதீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
