தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தஞ்சாவூரில் ரயிலடி பகுதியில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா உருவ சிலைகளுக்கு அதிமுக (எடப்பாடி அணி) சார்பில் முன்னாள் மேயர் சாவித்திரிகோபால் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திருஞானம் பால்வளத் தலைவர் காந்தி, நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன் ஆகியோர் தலைமையில் பேரணியாக வந்து ஜெயலலிதா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், அதேபோல் தெற்கு வீதி, மேலவீதி பகுதியில் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் தலைமையில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது மேலும் நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன் ஏற்பாட்டில் மேம்பாலம் பார்வைத் திறன் குறையுடையோருக்கான பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ராஜமாணிக்கம், கவுன்சிலர்கள் கோபால் தெட்சிணாமூர்த்தி, காந்திமதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
