தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் “மகிழ்ச்சி ” மாத இதழ் வெளியீடு

633

தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் பணியாளர்களுக்கான மகிழ்ச்சி மாத இதழ் வெளியீட்டு விழா மற்றும் மருத்துவமனையின் 10ஆம் ஆண்டு வெற்றி விழாவினை முன்னிட்டு பணியாளர்களுக்கான மீனாட்சி சங்கமம் விளையாட்டு போட்டி தொடக்க விழா நடைபெற்றது, பணியாளர்களின் திறமைகளை வெளிகாட்டும் விதமாக அவர்களுக்கான மாதாந்திர இதழ் மகிழ்ச்சி என்னும் இதழ் வெளியிடப்பட்டது, இந்நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ரவிச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார், சிறப்பு விருந்தினர்களாக தஞ்சை மாவட்ட காவல் டிஎஸ்பி ராஜா, மற்றும் விஜய் டிவி புகழ் கோபிநாத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர், மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குனர் காமினி குருசங்கர் தலைமையேற்று விழாவினை சிறப்பித்தார், மருத்துவமனை பொது மேலாளர் டாக்டர் பாலமுருகன் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 3