மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத் திட்டத்தின் கீழ் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் சண்முகா பிரிசிஷன் போர்ஜிங் இணைந்து ஓராண்டு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த உள்ளன, இத்திட்டத்தின் கீழ் CNC மெஷினிங், போர்ஜிங், வெல்டிங் மற்றும் டெஸ்க்டாப் கம்யூட்டிங் ஆகிய பிரிவுகளில் பயிற்சி வழங்கப்படும், இந்த ஓராண்டு பயிற்சி பெறுபவர்கள் இத்துறைகளில் எளிதாக வேலை வாய்ப்பு பெற முடியும், மேலும் அவர்களாகவே சொந்த தொழில் தொடங்க ஏதுவாகவும் இருக்கும், 8 ம் வகுப்பு தேறியவர்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம், இப்பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ 5000 ஊக்கத்தொகை வழங்கப்படும், மதிய உணவும் இலவசமாக வழங்கப்படும், பயிற்சியின் நிறைவில் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக் கழகத்தால் சான்றிதழ் வழங்கப்படும், இப்பயிற்சியில் சேர விரும்புபவர்கள் 11-11-22 தேதிக்குள் கீழ்கண்ட மொபைல் எண்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம், 9994967805 & 6383755260 அல்லது தஞ்சை திருமலை சமுத்திரத்தில் உள்ள சண்முகா பிரிசிஷன் போர்ஜிங்கிற்கு நேரில் வந்தும் பதிவு செய்து கொள்ளலாம்