அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை வலுத்து வரும் நிலையில் முன்னாள் முதல்வர்கள் இபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகின்றனர் இந்நிலையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளராகவும் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்து வரும் வைத்திலிங்கம் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றார் இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது ஆதரவாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் முன்னாள் மேயர் மற்றும் இணைச் செயலாளர் சாவித்திரிகோபால் மற்றும் அவரது கணவர் கவுன்சிலர் கோபால் முன்னாள் எம்பி பாரதிமோகன் முன்னாள் எம்எல்ஏக்கள் சேகர் ராமநாதன் ரெத்தினசாமி ஆவின் தலைவர் காந்தி முன்னாள் பகுதி செயலாளர்கள் சரவணன் புண்ணியமூர்த்தி ஒன்றிய செயலாளர்கள் வீரணன் இளங்கோ மற்றும் ராஜமாணிக்கம் டாக்டர் கண்ணன் நாகராஜன் பூபதி உள்ளிட்ட ஏராளமானோர் முன்னாள் அமைச்சர் காமராஜ் முன்னிலையில் இபிஎஸ் சை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர் இதற்கு காரணம் தன்னை விட யாரும் வளர்ந்து விடக் கூடாது என்று வைத்திலிங்கம் அனைவரையும் கட்டுபடுத்தி இருந்தார் இதனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் கூடாரம் காலி ஆகி அவரை அதிர்ச்சியடைய செய்துள்ளது