வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கவும்

1130

தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 11.06.2022 (சனிக்கிழமை) அன்று தாராசுரம் KSK பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் காலை 8.30 மணிமுதல் பிற்பகல் 3.00 மணிவரை நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, திருப்பூர், கோவை, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட நகரங்களிலிருந்து 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர். இம்முகாமில் 5-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், நர்சிங் மற்றும் பி.இ. கல்வி தகுதிகளுக்குரிய வேலைநாடுவோருக்கு 10,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பினை அளிக்க உள்ளனர். இம்முகாமில் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ஆள்சேர்ப்பும் நடைபெறுகிறது. மேலும், வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்கான பதிவு மற்றும் ஆலோசனையும் வழங்கப்பட உள்ளது. எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த வேலை தேடும் இளைஞர்கள் தங்களின் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ் நகல்களுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் மேலும் இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் தங்களது சுய விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளவும், பதிவு செய்ய இயலாதவர்கள் நேரடியாக முகாமில் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்து கொள்ளப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு 04362-237037, 9442557037 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளும்படி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.