தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன, இதில் 3வது வார்டில் மதிமுகவை சேர்ந்த சுகந்தி துரைசிங்கம் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார், இந்நிலையில் தனது வார்டு பொதுமக்களுக்கு சேவை செய்யும் நோக்குடன் கட்டணமில்லா சேவை வசதியினை தொடங்கி உள்ளார்,தனது வார்டு பகுதியில் நடைபெறும் துக்க நிகழ்வுகளுக்கு இறுதி ஊர்வல வண்டியும், குளிர்சாதனப் பெட்டியும் கட்டணம் இல்லாமல் தனது சொந்த செலவில் செய்து தருகிறார்,இந்த சேவையினை தெரியப்படுத்தும் வகையில் வார்டு பகுதிகளில் ஆங்காங்கே ப்ளக்ஸ் வைத்து பொதுமக்கள் இதை பயன்படுத்தி கொள்ளவும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார், இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட சாந்திவனம், ராஜாகோரி, மாரிகுளம் ஆகிய மயானங்களில் இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய கட்டணமில்லா சேவை தொடங்கப்பட்டது இதனையடுத்து 3வது வார்டு கவுன்சிலர் இந்த சேவையினை வழங்கி வருவது, குறிப்பிடத்தக்கது,துக்க நிகழ்வுகளுக்கு சுமார் ரூ 20 ஆயிரம் வரை செலவு செய்த நிலையில் இச்சேவை பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும்