தமிழ்நாடு காவல் துறையில் வேலை, விண்ணப்பிக்கவும்

1265

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால்  (TNUSRB) காவல்துறையில் காலியாக உள்ள  444 உதவி சார்பு ஆய்வாளர் (தாலுகா மற்றும் ஆயுதப்படை)  காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒர் இளங்கலை பட்டப்படிப்பு  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  வயது வரம்பு 01.07.2022 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும் .இத்தேர்விற்கு ஏப்ரல் 7–ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வானது ஜூன் மாதம்  நடைபெற  உள்ளது. மேலும் இரண்டாம் நிலை காவலர் பணியிடத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதற்கான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் வயது வரம்பு 24 க்குள் இருக்க வேண்டும்,தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ  பயிலும் வட்டத்தின் வாயிலாக மேற்கண்ட சீருடை பணியாளர் தேர்வுகளுக்கான  இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 01.04.2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு தொடங்கி நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் அனுபவமிக்க சிறப்பு வல்லுநர்களைக் கொண்டு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதோடு, பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு, மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த காவல்துறை பணிக்குத் தயாராகும்  இளைஞர்கள் தங்களது பெயர் மற்றும் கல்வித் தகுதியினை குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் அனுப்பி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. எனவே போட்டித் தேர்வெழுதும் இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயனடையுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.மேலும் தொடர்புக்கு அலுவலக தொலைப்பேசி எண்  04362-237037.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

86 − = 84