முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள், அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

906

தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு நாள் தமிழகம் முழுவதும் அதிமுக கட்சியினரால் அனுசரிக்கப்படுகிறது அதைப்போல் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் ரயிலடி பகுதியில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கல சிலைக்கு மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திருஞானம் தலைமையில் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் ஆவின் தலைவர் காந்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர் மேலும் தெற்கு வீதி பகுதியில் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி ஏழை எளியவர்களுக்கு அன்னதானமும் வழங்கினார், இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, மெடிக்கல் சரவணன் புண்ணியமூர்த்தி, ரமேஷ்,மகளிரணி செயலாளர் அமுதா ரவிச்சந்திரன், சண்முகபிரபு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்